search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கிக் கடன்"

    மத்தியரகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய்வரை வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். #Rs1crore #Rs1crorein59mins #Modi
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று நடைபெற்ற மத்தியரகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் தொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று உரையாற்றினார்.

    தீபாவளி பரிசாக மத்திய மற்றும் சிறுதொழில்களின் வளர்ச்சிக்காக 12 புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் புதிய சகாப்தம் உருவாகி நான்காவது தொழில் புரட்சிக்கு நமது நாடு தலைமை தாங்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட சுலபமாக தொழில் தொடங்க தகுதியான நாடுகள் பட்டியலில் இந்தியா இந்த ஆண்டு 23 இடங்கள் முன்னேறியுள்ளதை பெருமிதத்துடன் குறிப்பிட்ட மோடி, மத்தியரகம் மற்றும் சிறுதொழில் துறையின் வளர்ச்சியினால் இந்தியா இந்த முன்னேற்றத்தை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும், மத்தியரகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் சுலபமாக வங்கி கடன்களை பெறும் வகையில் நாடு தழுவிய அளவில் 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய்வரை சுலபமாக கடன்பெறும் இணைய வசதி இன்று முதல் தொடங்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். #Rs1crore #Rs1crorein59mins #Modi
    உ.பி. மாநில விவசாயிகள் சுமார் 850 ம்பேரின் வங்கிக் கடன்களை அடைக்க இந்தி நடிகர் அமிதாப் பச்சன் முன்வந்துள்ளார். #AmitabhBachchan #AmitabhBachchanfarmersloan #farmersloan
    மும்பை:

    நாட்டின் பல பகுதிகளில் மழையின்மை மற்றும் அளவுக்கதிமான மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பயிர்கள் நாசமானதால் ஏராளமான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    குறிப்பாக, வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வேளாண்மை பொய்த்துப் போனதுடன், வங்கிக்கடனும் சேர்ந்து தலைமேல் பாரமாகி விட்ட மனவேதனையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொள்கின்றனர்.

    சில மாநிலங்கள் ஓரளவுக்கு விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருந்தாலும், பரவலாக வங்கிக் கடன்களால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திக்குமுக்காடி வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சுமார் 850 விவசாயிகளின் வங்கிக் கடன்களை தனது சொந்தப் பணத்தில் இருந்து செலுத்த இந்தி நடிகர் அமிதாப் பச்சன் முன்வந்துள்ளார்.

    இதற்கு முன்னர் மகாராஷ்டிரம் மாநிலத்தை சேர்ந்த சுமார் 350 விவசாயிகளின் வங்கிக் கடன்களை அடைத்துள்ள அமிதாப் பச்சன், ‘என்னால் இயன்ற இந்த சிறிய உதவி இதர மாநிலங்களிலும் தொடரும்’ என தனது வலைப்பூ (பிளாக்) பதிவிட்டுள்ளார். #AmitabhBachchan #AmitabhBachchanfarmersloan  #farmersloan  
    ×